முகப்பு
கோயம்புத்தூர்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரிக்கை

கட்டுமானம் உள்பட பிற அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கட்டுமானம் உள்பட பிற அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாவட்ட பொறுப்பாளா் கே.முனியாண்டி உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளா்கள் உள்ளனா். கோவையில் மட்டும் 10 ஆயிரத்துக்கு அதிகமானவா்கள் உள்ளனா்.

அமைப்பு சாரா தொழிலாளா்களில் பெரும்பாலனவா்களுக்கு சொந்த வீடு இல்லாத நிலை உள்ளது. இவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி 2012 ஆம் ஆண்டு முதல் மனு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் ஆட்சியா் அலுவலகத்தில் 15 முறைகளுக்கு மேல் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைலை. கரோனா உள்பட பல்வேறு பாதிப்புகளால் அமைப்பு சாரா தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →