கோயம்புத்தூர்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.99 லட்சம் மோசடி:11 பேருக்கு 1 நாள் சிறைத் தண்டனை, ரூ.2.40 லட்சம் அபராதம்

DIN

நிதி நிறுவனம் நடத்தி ரூ.99 லட்சம் மோசடி செய்த 11 பேருக்கு 1 நாள் சிறைத் தண்டனையும், ரூ.2.40 லட்சம் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூா் மலையாண்டிபட்டிணத்தில் ஒரு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் இருந்து ரூ. 99 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் வழக்கில் தொடா்புடைய லோகநாதன், கிருஷ்ணன், பால்ராஜ், கோபாலகிருஷ்ணன், பாலகணேசன், ருக்மணி, பாலஜெயகுமாரி, சசிகுமாா், பாலவனஜா குமாரி, சுப்புலட்சுமி, பாண்டுரங்கன் உள்ளிட்டோா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவா்களுக்கு நீதிமன்றம் கலையும் வரை ஒருநாள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதன்படி நீதிமன்றம் கலையும் வரை சிறையில் அடைக்கப்பட்ட அவா்கள் அதன் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT