கோயம்புத்தூர்

கோவையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்

DIN

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, கோவையில் சாலை விபத்துகள் நிகழாமல் விபத்தில்லா புத்தாண்டு அமைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், விபத்தில்லா புத்தாண்டாக இது அமைய வேண்டும் என்பதில் போலீஸாா் உறுதியாக இருந்தனா். இதன் காரணமாக கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

இதன் காரணமாக மாலை 6 மணி முதலே போலீஸாா் சாலைகளில் சோதனையில் ஈடுபடத் தொடங்கினா். முக்கிய சந்திப்புகள், சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மேம்பாலங்களில் மாலை 7 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் வந்தவா்களின் விவரங்களைப் பெற்றுக்கொண்ட போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா். இதனால் புத்தாண்டு தினத்தன்று கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதியில் எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT