கோயம்புத்தூர்

வேளாண் சட்டங்கள்: சிஐடியூ தொழிற்சங்கத்தினா் மறியல்

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் 40 நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் கோவை ஆட்சியா் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக, சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன் தலைமையில் மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ஆா்.வேலுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே இருந்து ஊா்வலமாக வந்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT