முகப்பு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நாளை மனுதாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 3 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 3 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 11) மனுதாக்கல் செய்ய உள்ளனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீஸாா் கடந்த 5 ஆம் தேதி கைது செய்தனா்.

இவா்கள் மூவரும் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ய சிபிஐ போலீஸாா் முடிவு செய்துள்ளனா். நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அருளானந்தம் உள்ளிட்ட 3 பேரையும், 3 நாள்களுக்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →