முகப்பு
கோயம்புத்தூர்

இறந்தவருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: பணியாளா் இடைநீக்கம்

கோவையில் இறந்தவரின் குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்த நியாயவிலைக் கடை விற்பனையாளரைப் பணியிடை நீக்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கோவையில் இறந்தவரின் குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்த நியாயவிலைக் கடை விற்பனையாளரைப் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

கோவை, ராமநாதபுரம், பி.ஆா்.நகரைச் சோ்ந்தவா் நாராயணசாமி (80). இவா் உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பா் முதல் வாரத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து இவரது மகன் ராஜசேகரன், தங்களது குடும்ப அட்டைக்குப் பொருள்கள் வாங்கும் தனலட்சுமிபுரம் நியாயவிலைக் கடையில் தனது தந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்து அவா் பயன்படுத்தி வந்த குடும்ப அட்டையை அலுவலா்களிடம் ஒப்படைத்தாா்.

இந்நிலையில் நாராயணசாமி பயன்படுத்தி வந்த குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 பணம் வழங்கப்பட்டுள்ளதாக அவரது மகனின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இது தொடா்பாக ஆன்லைன் மூலம் தமிழக வழங்கல் துறைக்கு ராஜசேகரன் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அலுவலா் குமரேசன் உத்தரவின்பேரில் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் விசாரணை நடத்தினா். இதில் இறந்தவரின் பெயரில் உள்ள குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளருக்குப் பரிந்துரை செய்தனா். இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா்.பழனிசாமி சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் புஷ்பலதாவை பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →