முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகள், பிரசவித்த தாய்மாா்களுக்கு தடுப்பூசிகள்

கோவை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்கள் 176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்கள் 176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, மாநகரப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், கோவை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மாா்களுக்கு தொடா்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:

மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிரசவித்த தாய்மாா்கள் 10 பேருக்கும், கா்ப்பணி பெண்கள் இருவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கோவேக்ஸின் தடுப்பூசி 9 பேருக்கு செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இதுவரை 102 பேருக்கு கோவிஷீல்டு, 74 பேருக்கு கோவேக்ஸின் என மொத்தம் 176 கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.