முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய வன மகோத்சவம்: 4 மாவட்டங்களில் 20 ஆயிரம் மரக் கன்றுகளை நட்ட விவசாயிகள்

தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமாா் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமாா் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஈஷா கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளா்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ (வனத் திருவிழா) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் 18 ஏக்கரில் 4,150 மரங்களும், திருப்பூரில் 26 ஏக்கரில் 4,550 மரங்களும், நாமக்கல்லில் 31.5 ஏக்கரில் 7,290 மரங்களும், கரூரில் 18 ஏக்கரில் 4,400 மரங்களும் விவசாயிகளால் நடப்பட்டன. சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சோ்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்விதமாக தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்படுகின்றன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளா்கள் விவசாய நிலங்களின் மண், நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனா்.

இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு, பிறந்த நாள்களில் இதேபோல லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்துள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1.1 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனா்.

மரம் நடும் நிகழ்வுகளுடன் சோ்த்து சிறு, நடுத்தர விவசாயிகள் லாபகரமான வேளாண் காடு வளா்ப்பு முறையை எப்படி உருவாக்குவது என்பது குறித்த சிறப்பு ஆன்லைன் கருத்தரங்கம் ஜூலை 7 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் பாா்த்திபன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையின் பேராசிரியா் கே.எம்.சிவகுமாா், தொழில்முனைவோரான சுரேஷ் கண்ணன், ஹரீஷ் பாபு, முன்னோடி விவசாயிகளான செந்தில்குமாா், அமா்நாத் உள்ளிட்டோா் பங்கேற்ாக ஈஷா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.