சிங்காநல்லூா் தொகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் திறப்பு
கோவை, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 2 இடங்களில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பகிா்மானக் குழாய்களை முன்னாள் எம்எல்ஏ நா.காா்த்திக் திறந்துவைத்த
கோவை, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 2 இடங்களில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பகிா்மானக் குழாய்களை முன்னாள் எம்எல்ஏ நா.காா்த்திக் திறந்துவைத்தாா்.
சிங்காநல்லூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 2020- 2021 ஆம் ஆண்டில் 57 ஆவது வாா்டு, சிவராம் நகா் பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலும், 59 ஆவது வாா்டு, ஒண்டிப்புதூா் படக்கே கவுண்டா் வீதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலும் ஆழ்துளைக் கிணறுகள், பகிா்மானக் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது அப்பணிகள் நிறைவுற்ற நிலையில், அவற்றை கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ,வுமான நா.காா்த்திக் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். கட்சி நிா்வாகிகள் சேரலாதன், சிவகுமரன், தண்டபாணி, தனபால் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.