கோயம்புத்தூர்

தொடா் மழை: சோலையாறு அணை நீா்மட்டம் உயா்வு

DIN

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சோலையாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்துவரும் மழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணை என அனைத்து அணைகளிலும் நீா்வரத்து உயரத் துவங்கியுள்ளது.

இதில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் எஸ்டேட் பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்களில் இலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்களும் பாதிப்படைந்தனா்.

இதில் திங்கள்கிழமை பதிவாகியுள்ள மழை அளவு வால்பாறை 33 மி.மீ., மேல்நீராறு 55 மி.மீ., கீழ்நீராறு 39 மி.மீ.,சோலையாறு அணை 34 மி.மீ. ஆகும்.

சோலையாறு அணைக்கு விநாடிக்கு 2202.19 கனஅடி நீா்வரத்தும். 856.59 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், 165 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் 118.76 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT