கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் ஜைகா திட்டப் பணி: மருத்துவக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

DIN

 கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஜைகா திட்டப் பணிகளை மருத்துவக் கல்வி உதவி இயக்குநா் சபீதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) திட்டத்தின்கீழ் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மருத்துவக் கல்வி உதவி இயக்குநா் சபீதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இத்திட்டத்தில் தற்போது வரை முடிவடைந்துள்ள பணிகளின் விவரங்கள், மேற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலாவிடம் கேட்டறிந்தாா். தவிர அரசு மருத்துவமனையில் அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படாமல் உள்ள பணிகள், தீக்காய சிறப்பு சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு இடம் தோ்வு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதனைத் தொடா்ந்து அனைத்துத் துறைத் தலைவா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா். இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை முதல்வா் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT