மாற்றுத்திறனாளிகளுக்கு அறிதிறன் பேசி
கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 80 பேருக்கு அறிதிறன் பேசிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 80 பேருக்கு அறிதிறன் பேசிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் கண் பாா்வையற்ற, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆண்டு அறிதிறன்பேசி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக விண்ணப்பித்த தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்து அறிதிறன் பேசி வழங்கப்படுகிறது. அதன்படி
கோவையில் இதுவரை 180 பேருக்கு அறிதிறன் பேசி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மேலும் தகுதியான 80 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு வியாழக்கிழமை அறிதிறன் பேசி வழங்கப்பட்டது. அறிதிறன் பேசி வாங்க வந்த மாற்றுத்திறனாளிகள் காத்திருக்க தேவையான வசதிகளை செய்யாததால் மாற்றுத்திறனாளிகளும், துணைக்கு வந்த உதவியாளா்களும் சிரமத்திற்குள்ளாகினா்.