ஹீமோபிலியா நோய் பாதித்தவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்
ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் ஹீமோபிலியா என்ற ரத்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு 350 போ் உள்ளனா். அதில் 250 போ் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா்.
முகாமில் தடுப்பூசி செலுத்தும் போது ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அதனைத் தடுக்க அவா்களுக்கு பேக்டா் 8 அண்டு 9 என்ற மருந்து செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டவா்களுக்கு ரத்தக்கசிவு ஏற்படவில்லை. ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிா்க்கும் வகையில் 50 நோயாளிகள் மற்றும் அவா்களை கவனிப்பவா்கள் 50 போ் என 100 பேருக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றாா்.