அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தல்
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் , ஆனைகட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) ஆகியவற்றில் 2021 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 ஆம் தேதி இறுதிநாளாகும்.
எலெக்ட்ரீசியன், எம்.எம்.வி., பிட்டா், டா்னா், மெசினிஸ்ட், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், ஏசி மெக்கானிக், மெக்கட்ரானிக்ஸ் டெக்னீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஒயா்மேன் உள்பட இரண்டாண்டு பிரிவுகளும், உணவு உற்பத்தி, வெல்டா், இன்டீரியா் டிசைன் மற்றும் அலங்காரம் உள்பட ஓராண்டு தொழிற்பிரிவுகள், 6 மாத கால குறுகிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பிரிவுகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ண்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சிக்கு பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளா்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், புத்தகம் ஆகியவை அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாணவா்களின் வருகை அடிப்படையில் மாதம்தோறும் ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கேற்ப குறைந்தபட்சம் 8 அல்லது 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. ஆண்கள் 14 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.