முகப்பு
இந்தியா

'நான்தான் கடவுள்' பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்! மகாராஷ்டிரத்தில் அதிர்ச்சி!!

கடவுள் என்று கூறிக்கொண்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்..

Updated On : 28 மார்ச், 2026 at 4:04 AM
ரிஷிகேஷ் வைத்யா - X
பகிர்:

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு சாமியார், தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ் வைத்யா(40). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முகநூல் மூலமாக 35 வயது பெண் ஒருவருடன் பேசியுள்ளார். 2023 டிசம்பரில் அந்த பெண்ணைச் சந்திக்க புணேவுக்கு வந்துள்ளார். தன்னை சிவபெருமானின் அவதாரம் என்றும் அந்த பெண்ணை 'பார்வதி' என்றும் கூறி பேசி வந்துள்ளார்.

பின்னர் புணேவில் மஞ்சுரி பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு முன்னதாக மயக்க மருந்தும் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பெண்ணின் அனுமதியின்றி புகைப்படமும் எடுத்துள்ளார்.

பால்கர் மாவட்டத்தில் ஒரு சமூக அமைப்பை நடத்தி வரும் ரிஷிகேஷ், கடந்த ஆண்டு மே மாதம் அந்த பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் ரிஷிகேஷ் வைத்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்களைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் புகாரில் அந்த பெண் கூறியுள்ளார்.

நாசிக்கில் கடற்படை முன்னாள் அதிகாரி அசோக் காரத், தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கைதான தகவல் தெரிய வந்ததையடுத்து, அந்த தைரியத்தில் இந்த பெண் புகார் அளிக்க முன்வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரிஷிகேஷ் இதேபோன்று வேறு பல பெண்களையும் மயக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். ரிஷிகேஷை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

குற்றம் புணேவில் நடந்ததாகக் கூறப்படுவதால் பெண் புகார் அளித்த மணிக்பூர் காவல்துறை 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்'(குற்றம் எங்கு நடந்தாலும் எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யலாம்) பதிவு செய்துள்ளது. மேல் விசாரணைக்காக புணேவின் ஹடப்சர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றியுள்ளது.

கடவுள் என்று கூறிக்கொண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்த சம்பவங்கள் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிகேஷ் வைத்யா மீது மேலும் பல பெண்கள் புகார் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Maharashtra godman claims he's God, rapes and blackmails woman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.