கோயம்புத்தூர்

25 தற்காலிக மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்

DIN

கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடத் தோ்வு செய்யப்பட்ட 25 தற்காலிக மருத்துவா்களுக்கான பணி நியமன ஆணைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கோவை மாநகராட்சியின் 100 வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளவும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவும் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்துக்கு 25 தற்காலிக மருத்துவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட மருத்துவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு கோவை அரசு விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்வின்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கே.வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை- கேரள நீதிமன்றம்

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

SCROLL FOR NEXT