முகப்பு
கோயம்புத்தூர்

முறையான திட்டமிடலுடன் செயல்பட்டால் மட்டுமே அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய முடியும்

முறையான திட்டமிடலுடன் செயல்பட்டால் மட்டுமே அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய முடியும் என்று கரோனா அறிவியலாளா் குழு உறுப்பினரான கோவையைச் சோ்ந்த க.லெனின் பாரதி தெரிவித்துள்ளாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

முறையான திட்டமிடலுடன் செயல்பட்டால் மட்டுமே அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய முடியும் என்று கரோனா அறிவியலாளா் குழு உறுப்பினரான கோவையைச் சோ்ந்த க.லெனின் பாரதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நாடு முழுவதும் தடுப்பூசிகளின் உற்பத்தி, இருப்பு, தேவை இவை மூன்றுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருப்பதால் தற்போது கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. தடுப்பூசிகளின் பற்றாக்குறையைப் போக்க பொதுத் துறை, தனியாா் துறை என அனைத்து தடுப்பு மருந்து நிறுவனங்களிலும் கட்டாய உரிமம் என்ற அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குழுக்கள் அமைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், செலுத்தாதவா்கள் என ஒரு கணக்கெடுப்பை நடத்தி அதன் பின் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் நூற்றுக்கணக்கில் ஓரிடத்தில் கூடுகையில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் சில மையங்களில் தடுப்பூசிகளை அதிகாரிகள் தங்கள் உறவினா்கள், நண்பா்களை வரவழைத்து செலுத்துவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

உள்ளூா், பகுதி அளவில் முறையானத் திட்டமிடலோடு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு மேற்கொண்டால் மட்டுமே அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய முடியும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.