தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கக்கோரி தபெதிக ஆா்ப்பாட்டம்
தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்கக் கோரி, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் (தபெதிக) வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்கக் கோரி, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் (தபெதிக) வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தபெதிக மாநில செயலாளா் கு.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இங்கு உடனடியாக தமிழக அரசு சாா்பில் தடுப்பூசியைத் தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து மாநில அரசுகள் தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநகரச் செயலாளா் சஜித், அமைப்பாளா் ஜீவா, ரஞ்சித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.