இ.கம்யூனிஸ்ட் கட்சியினா் 46 போ் மீது வழக்கு
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 46 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 46 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை பி.என் புதூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் சந்திரன் தலைமையில், அக்கட்சியினா் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், உயிரிழக்கும் தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.
இந்நிலையில், உரிய அனுமதியின்றி பொதுமுடக்க காலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 21 பெண்கள் உட்பட 46 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது, தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.