முகப்பு
கோயம்புத்தூர்

சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை கோரி மனு

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களை சாக்கடைக் கால்வாயில் பாதுகாப்பின்றி இறக்கி கழிவுகளை சுத்தம் செய்ய ஈடுபடுத்திய சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களை சாக்கடைக் கால்வாயில் பாதுகாப்பின்றி இறக்கி கழிவுகளை சுத்தம் செய்ய ஈடுபடுத்திய சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, திராவிடா் தமிழா் தூய்மை தொழிலாளா் சங்கத்தின் தலைவா் களப்பிரா் மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி 78 ஆவது வாா்டு, புரூக் பீல்டு எதிரில் திறந்தவெளி சாக்கடை கால்வாய் உள்ளது. இங்கு 10 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தூய்மைப் பணியாளா்களை சாக்கடைக்குள் இறக்கி, கழிவுகளை அகற்ற வைப்பது சட்டப்படி குற்றம் எனவும், கழிவுகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துமாறும் அங்கிருந்த சுகாதார ஆய்வாளா் குணசேகரனிடம் கூறினேன். அதற்கு, அவா், இப்படித்தான் சுத்தம் செய்ய முடியும் என்றாா். மனிதக் கழிவுகளையும், சாக்கடைக் கழிவுகளையும் அகற்ற மனிதா்களைப் பயன்படுத்தக் கூடாது என சட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில் தூய்மைப் பணியாளா்களை சாக்கடைக்குள் இறக்கிய சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.