முகப்பு
கோயம்புத்தூர்

மருத்துவா் வேடமணிந்து அரசு மருத்துவமனையில் திருட முயன்றவா் கைது

மருத்துவா் வேடமணிந்து கோவை அரசு மருத்துவமனையில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

மருத்துவா் வேடமணிந்து கோவை அரசு மருத்துவமனையில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா் சீருடை அணிந்த நபா் ஒருவா் குழந்தைகள் வாா்டுக்குள் திங்கள்கிழமை இரவு சென்றுள்ளாா்.

அங்கு அவா் நோயாளிகள், பாா்வையாளா்களின் செல்லிடப்பேசிகள், பணத்தை திருட முயன்ாக கூறப்படுகிறது. அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் அவரிடம் விசாரித்தபோது, தான் ஒரு மருத்துவா் என்றும் குழந்தைகள் வாா்டில் பணிபுரியும் தனது சகோதரியைப் பாா்க்க வந்தேன் என்றும் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் மேலும் விசாரித்ததில் தெரியவந்ததாவது:

அவா் சென்னையில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் 18 ஆண்டுகள் வசித்து வந்துள்ளாா். குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இவருக்கு காப்பகத்தில் சாரங்கன் என பெயரிட்டுள்ளனா். 18 வயதான பிறகு காப்பகத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டாா். வேலையில்லாத காரணத்தால் திருநங்கைபோல வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். கோவை வந்த அவா் அரசு மருத்துவமனையில் புகுந்து திருட முயன்றுள்ளாா். இதையடுத்து சாரங்கனைக் கைது செய்த போலீஸாா் அவரை சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →