முகப்பு
கோயம்புத்தூர்

ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல்: கூடுதல் கட்டணம் வசூலித்தவா் மீது நடவடிக்கை

கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்க கூடுதல் கட்டணம் வசூலித்த பணியாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்க கூடுதல் கட்டணம் வசூலித்த பணியாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்க வருபவா்களிடம் கட்டணமாக ரூ.500 பெறப்பட்டு, ஒரு அசல் அட்டையுடன், 2 நகல் ஓட்டுநா் உரிமம் அட்டை வழங்கிட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியாத நபா் மூலமாக அட்டைக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக, சென்னை போக்குவரத்து ஆணையா் அலுவலகத்துக்கு கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கடந்த மாதம் புகாா் மனு அனுப்பியிருந்தாா். இந்தப் புகாா் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையா் அலுவலகத்தில் இருந்து தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதில், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் சக்தி என்பவா், ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்க கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரை அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பணி இடமாற்றம் செய்து கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →