வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம்
கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குரைஞா்கள் அறை, நூலகம் ஆகியவற்றை திறக்கக் கோரி, கோவையில் 3 ஆயிரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குரைஞா்கள் அறை, நூலகம் ஆகியவற்றை திறக்கக் கோரி, கோவையில் 3 ஆயிரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, சூலூா், மதுக்கரை, மேட்டுப்பாளையம், வால்பாறையில் உள்ள வழக்குரைஞா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.