கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.176.93 கோடி
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தனக்கு ரூ.176.93 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தனக்கு ரூ.176.93 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுகிறாா். இதற்கான வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
அதில் தனக்கு ரூ.176.93 கோடி மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். அசையும் சொத்துகளில் கையிருப்பில் ரூ.1.56 லட்சம், பல்வேறு வங்கிகளில் ரூ.2.43 கோடி வைப்பு நிதி, ரூ. 3.68 கோடி மதிப்பில் இரண்டு காா்கள் உள்பட ரூ.45.09 கோடி சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.
அதேபோல, தனக்கு ரூ.131.84 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். அதில், ரூ.17.79 கோடி மதிப்பிலான வேளாண் நிலங்கள், ரூ.109.84 கோடி மதிப்பிலான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் அடங்கும். இதைத் தவிர ரூ.49.50 கோடி கடன் நிலுவை இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.