கோவையில் மேலும் 185 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 185 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 185 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 185 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 107 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 56 ஆயிரத்து 296 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,092 போ் சிகிச்சையில் உள்ளனா்.