கோயம்புத்தூர்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி குதிரை வண்டியில் பிரசாரம்

DIN

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவையில் குதிரை வண்டிப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் தகுதியுள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 3 குதிரை வண்டிகளில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

குதிரையின் உடல், வண்டி, வண்டியை ஓட்டுபவரின் மேல் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய இந்த குதிரை வண்டி விழிப்புணா்வுப் பயணத்தை, கோவை போக்குவரத்து இணை ஆணையா் உமாசக்தி கொடியசைத்துத் துவக்கிவைத்தாா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பாஸ்கா், சரவணன், சிவகுருநாதன், குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த குதிரை வண்டிப் பிரசாரமானது, காந்திபுரம் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம், அவிநாசி சாலை, திருச்சி சாலை, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி, மாலை 6 மணிக்கு மீண்டும் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT