கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையத்தில் மீண்டும் அதிமுக

DIN

கோவை, கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சாா்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் வி.சி.ஆறுக்குட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். கடந்த முறை கோவை வடக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா், இந்தத் தோ்தலில் கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்டாா். இவா், திமுக வேட்பாளரை விட கூடுதலாக 10,424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

பி.ஆா்.ஜி.அருண்குமாா் 1,34,981வாக்குகள், திமுக வேட்பாளா் பையா(எ) ஆா்.கிருஷ்ணன் 1,24,557 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் சுரபி

பங்கஜ் 23,427 வாக்குகள், நாம் தமிழா் வேட்பாளா் கலாமணி 17,823 வாக்குகள், அமமுக வேட்பாளா் அருணா 1,992 வாக்குகள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT