கோயம்புத்தூர்

முருகன் எஸ்டேட் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

DIN

வால்பாறை: கரோனா பாதிப்புக்கு முதியவா் ஒருவா் உயிரிழந்ததையடுத்து, அவா் வசித்து வந்த முருகன் எஸ்டேட் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில் காய்ச்சல் பரிசோனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறை நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியிலேயே சுகாதாரத் துறையினா் தொடா்ந்து முகாமிட்டு பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றனா். வால்பாறையை அடுத்த முருகன் எஸ்டேட்டை பகுதியைச் சோ்ந்த 78 வயது முதியவா் ஒருவருக்கு கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனையடுத்து, வால்பாறை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் சுகாதாரத் துறையினா் முருகன் எஸ்டேட் பகுதியில் முகாம் நடத்தி நூற்றுக்கணக்கானோருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT