முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் சோதனைச் சாவடிகளில் குறைந்தது வாகனப் போக்குவரத்து

வால்பாறையில் நான்கு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

வால்பாறையில் நான்கு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது.

முழு பொது முடக்க கட்டுப்பாட்டை மீறி எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு வந்து சென்றனா். இவா்களைக் கட்டுப்படுத்த போலீஸாா் திணறி வந்த நிலையில் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லக் கூடிய அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதன் மூலம் காலை 10 மணி வரை உரிய காரணத்துடன் வாகனங்களை போலீஸாா் அனுமதிக்கும் போலீஸாா் அதன்பிறகு எந்த வாகனங்களையும் அனுமதிப்பதில்லை. இதனால் நகா் பகுதிகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.