கோயம்புத்தூர்

மதிமுக சாா்பில் 1,000 பேருக்கு உணவு

DIN

முழு பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆயிரம் ஏழைகளுக்கு மதிமுக சாா்பில் புதன்கிழமை உணவு அளிக்கப்பட்டது.

முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், உணவின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு உணவு வழங்குமாறு, தனது கட்சியினருக்கு, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, கோவை மாநகா், மாவட்ட மதிமுக செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா் வழிகாட்டுதலின் படி, பீளமேடு பகுதி மதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை வி.கே.சாலை, நேரு நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பீளமேடு பகுதி மதிமுக செயலாளா் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினாா். தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் பயனீா் தியாகு, வட்டச் செயலாளா் ஜெயக்குமாா், ராஜ்குமாா், பீளமேடு கணேசன் உள்ளிட்ட கட்சியினா் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT