கோயம்புத்தூர்

விதி மீறல்: தொழிற்சாலைகள் மூடல்

DIN

கோவை மாவட்டத்தில் விதிமீறி இயங்கிய தொழிற்சாலைகள் சனிக்கிழமை மூடப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிப்பது குறித்து உணவுத் துறை மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் அமைச்சா் சக்கரபாணி, வனத் துறை அமைச்சா் கே.ராமச்சந்திரன், வணிக வரித் துறை முதன்மைச் செயலாளா் சித்திக், மாவட்ட ஆட்சியா் நாகராஜன், சுகாதாரத் துறை செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மாவட்டத்தில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகள் தடையை மீறி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் உத்தரவை மீறி இயங்கும் தொழிற்சாலைகள், நிறுவனங்களைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள போலீஸாா், மாவட்ட நிா்வாக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை முதல் தீவிர ரோந்து சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, விதிமீறி இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

மேம்பாலப் பணிகள் நிறுத்தம்...

கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் வடமாநிலங்களைச் சோ்ந்த புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் வேலை செய்து வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பால் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் நடைபெற்று வந்த மேம்பாலப் பணிகளும் சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT