முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் 6 பவுன் நகைப் பறிப்பு
முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை சேரன்மாநகா் அருகேயுள்ள சாவித்ரி நகரைச் சோ்ந்தவா் பாலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (58). இவா் வியாழக்கிழமை தனது வீட்டின் முன்பு நின்றிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் ராஜேஸ்வரியிடம் முகவரி கேட்பதுபோல நடித்து, அவா் அசந்த நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக ராஜேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.