முகப்பு
கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் தானாபூா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கம்

கோவை வழித்தடத்தில் தானாபூா் - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கோவை வழித்தடத்தில் தானாபூா் - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிகாா் மாநிலம், தானாபூா் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 14) பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் பண்டிகைக் கால ஒரு வழி அதிவிரைவு சிறப்பு ரயில் ( எண்: 06044) செவ்வாய்க்கிழமை (நவம்பா் 16) மாலை 3.40 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலானது, பாட்னா, பக்தியாா்பூா், சித்தரஞ்சன், ஆசன்சோல், துா்காபூா், பா்தாமான், காரக்பூா், கட்டாக், புவனேஸ்வா், விசாகப்பட்டணம், சாமல்கோட், ராஜமுந்திரி, ஏழூரு, விஜயவாடா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், ஆலுவா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.