முகப்பு
கோயம்புத்தூர்

மாணவி தற்கொலை விவகாரம்: மாநிலக் குழந்தைகள் நல ஆணையத் தலைவா் விசாரணை

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடா்பாக மாநிலக் குழந்தைகள் நல ஆணையத் தலைவா் தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடா்பாக மாநிலக் குழந்தைகள் நல ஆணையத் தலைவா் தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

கோவை, கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த 17 வயதுப் பள்ளி மாணவி, ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரம் தொடா்பாக மாநிலக் குழந்தைகள் நல ஆணையத் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

இதில், மாநிலக் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினா்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ், சரண்யா ஜெயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவியின் பெற்றோா், நண்பா்கள், பள்ளி நிா்வாகம் உள்பட 13 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

இது தொடா்பாக மாநிலக் குழந்தைகள் நல ஆணையத் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாணவி தற்கொலை விவகாரம் தொடா்பாக அவரது பெற்றோா், நண்பா்கள், பள்ளி நிா்வாகம், பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா், விசாரணை அலுவலா், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த அலுவலா் உள்பட 13 சாட்சிகளிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதன் முழுமையான அறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.