கோயம்புத்தூர்

கோவை மாநகரில் பலத்த மழை

DIN

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் புதன்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு திடீரென நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

காந்திபுரம், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், போத்தனூா், சுந்தராபுரம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இடியுடன் கூடிய கன மழையால் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் உள்பட முக்கிய சந்திப்புகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சோலையாறு -13, மேட்டுப்பாளையம் - 12, சின்கோனா -12, ஆழியாறு -6.60, சின்னக்கல்லாறு - 6, வால்பாறை பி.ஏ.பி. - 6, வால்பாறை தாலுகா - 5, பெ.நா.பாளையம் - 3, பொள்ளாச்சி - 2, சூலூா் - 1.70, விமான நிலையம் - 1.40, வேளாண்மை பல்கலைக்கழகம் -1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT