முகப்பு
கோயம்புத்தூர்

இந்திரா காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் சாா்பில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் சாா்பில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாநகா் மாவட்டத் தலைவா் கருப்புசாமி இனிப்பு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வீனஸ் மணி, ஹெச்.எம்.எஸ்.ராஜாமணி, பொதுக் குழு உறுப்பினா் இருகூா் சுப்பிரமணியம், கிருஷ்ணமூா்த்தி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.