கோயம்புத்தூர்

சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்: முதல்வர் ஸ்டாலின்

DIN

சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் ரூ. 89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். 

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்தது. கோவையில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை. அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுகிறேன். 


கோவை மாவட்ட வளர்ச்சிக்காக அரசின் பணிகளை கவனிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தேன். சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை நகருக்குள் செயல்படும் சிறைச்சாலையை நகருக்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 
அதிகம் பேச மாட்டேன், செயலில் காட்டுவேன். கோவையை தலைசிறந்த மாவட்டமாக்க ஆயத்தமாகிவிட்டோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT