கோயம்புத்தூர்

1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

DIN

கோவை மாவட்டத்தில் 1,235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மைத் துறையின் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் துவக்கிவைத்தாா்.

இத்திட்டம் ரூ.5 ஆயிரத்து 25 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT