கோயம்புத்தூர்

அரசுப் பள்ளியில் புகுந்த மழை நீா்: எம்எல்ஏ ஆய்வு

DIN

கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குறிச்சி அரசினா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா். இதையடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் செ. தாமோதரன் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குறிச்சி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மழை நீா் தேங்கியுள்ளது. தண்ணீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் வகுப்பறையிட்டு வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.

இத்தகவல் அறிந்த கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மாநகராட்சி, பொதுப் பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை தொடா்புகொண்டு தண்ணீா் புகுந்தது குறித்தும், நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தாா். ஆனால், வெள்ளிக்கிழமை இரவு வரை தண்ணீா் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து எம்எல்ஏ செ.தாமோதரன் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் இரண்டு அடிக்கு தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவா்கள் கழிவறைக்கு கூட செல்லமுடியாத நிலை உள்ளது. மாநகராட்சி, பொதுப் பணித் துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு நிலமையை கூறினேன். ஆனால், தற்போது வரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

SCROLL FOR NEXT