கோயம்புத்தூர்

மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்டத்தில் மருந்தாளுநா்கள், மருந்து கிடங்கு அலுவலா்களுக்கு கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

மக்கள் நலன் கருதி 1,200 க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தகக் கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனைகள், தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகங்களில் குளிா்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்றவா்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

100 முறை விடியோ பார்த்துவிட்டு பேட்டிங் ஆட சென்றாலும் ஆட்டமிழப்பேன்: ரோஹித்தை அச்சுறுத்திய பந்துவீச்சாளர் யார்?

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT