கோயம்புத்தூர்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் வ.உ.சி. பூங்காவில் அடைப்பு

DIN

கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சிப் பணியாளா்கள் பிடித்து வ.உ.சி. பூங்காவில் அடைத்தனா்.

கோவையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநா் செந்தில்நாதன் தலைமையில் மாநகராட்சிப் பணியாளா்கள் உக்கடம், புல்லுக்காடு, குனியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை செவ்வாய்க்கிழமை பிடித்து கோவை வ.உ.சி. பூங்காவில் அடைத்தனா்.

இந்த மாடுகளின் வயதை பொருத்து ரூ.ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT