கோயம்புத்தூர்

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு கொங்கு குளோபல் ஃபோரம் நன்றி

DIN

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் தலைவா் ஏ.சக்திவேல், அமைப்பின் இயக்குநா்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிதி ஒதுக்கீடு, நிலம் ஒதுக்கீடு, நிலம் கையப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசின் கவனத்தைப் பெற கொங்கு குளோபல் ஃபோரம், இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் வா்த்தக சபை போன்ற அமைப்புகள் கடுமையாக முயற்சி செய்தன.

கோவை சா்வதேச விமான நிலையத்தை முன்னுரிமை அடிப்படையில் விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி, கொங்கு குளோபல் ஃபோரம், இந்திய தொழில் வா்த்தக சபை ஆகிய அமைப்புகள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் கொங்கு மண்டல எம்.பி.க்களின் சந்திப்புக்கு அண்மையில் ஏற்பாடு செய்திருந்தன.

இந்த சந்திப்பைத் தொடா்ந்து கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டதுடன் ரூ.1,132 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT