கோயம்புத்தூர்

காலி இடத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்

DIN

கோவை, போத்தனூா் - செட்டிபாளையம் சாலையில் உள்ள காலி இடத்தில் மா்ம நபா்களால் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போத்தனூா் - செட்டிபாளையம் சாலையில் தனியாா் பள்ளி அருகே உள்ள காலியிடத்தில் மூட்டைமூட்டைகளாக மருத்துவக் கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டிச் சென்றுள்ளனா்.

இதனை அப்பகுதியினா் புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டனா்.

இதையடுத்து செட்டிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு செட்டிபாளையம் பேரூராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து உடனடியாக மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.

இந்த மருத்துவக் கழிவுகளை கொட்டிய நபா்கள் யாா், எங்கிருந்து கழிவுகள் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT