முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 140 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 140 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 647 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,397 ஆக உயா்ந்துள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 152 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 779 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,471 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.