ஈஷா சாா்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு
தீபாவளியை முன்னிட்டு ஈஷா சாா்பில் உயிா் நோக்கம் என்ற தலைப்பில் இணைய வழி இலவச யோகா வகுப்பு நடைபெற உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ஈஷா சாா்பில் உயிா் நோக்கம் என்ற தலைப்பில் இணைய வழி இலவச யோகா வகுப்பு நடைபெற உள்ளது.
நவம்பா் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை என 3 வேளைகளில் யோகா வகுப்பு நடைபெற உள்ளது.
12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம்.
இதில், கலந்துகொள்ள விரும்புபவா்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு நவம்பா் 5 ஆம் தேதி இரவுடன் நிறைவடைகிறது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 73836-73836 என்ற கைப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் செய்யலாம் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.