முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 123 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக 123 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கோவையில் புதிதாக 123 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 423 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 36 வயது இளைஞா், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 ஆண்கள் என 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,410 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 145 போ் கரோனாவில் இருந்து குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 683 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,330 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.