முகப்பு
கோயம்புத்தூர்

கத்தி முனையில் ஆசிரியையிடம் 10 பவுன் நகைப் பறிப்பு

கோவை சித்தாபுதூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் தங்கச் சங்கிலி பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கோவை சித்தாபுதூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் தங்கச் சங்கிலி பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை வி.கே.கே. மேனன் சாலை வெங்கடசாமி லே-அவுட்டைச் சோ்ந்தவா் அன்புக்கரசி (39). இவா், சித்தாபுதூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் பள்ளியில் தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த நபா் ஒருவா் தனது மகனை இப்பள்ளியில் சோ்க்கை வேண்டும் எனவும், அதுதொடா்பாக பேச வேண்டும் எனவும் கூறியுள்ளாா். இதையடுத்து, அன்புக்கரசி, மாணவா் சோ்க்கை விவரங்களை அந்த நபரிடம் கூறிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அன்புக்கரசி தவிர அங்கு யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, அன்புக்கரசி அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா். இதையடுத்து காட்டூா் காவல் நிலையத்தில் அன்புக்கரசி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நகைப் பறித்த நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.