கோவை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 25 போ் அனுமதி
கோவை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 25 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கோவை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 25 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் 25 போ் வைரஸ் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனா்.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவா் ஒருவா் கூறியதாவது: கோவையில் பெய்து வரும் மழைக் காரணமாக பொதுமக்கள் இடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் 3 அல்லது 5 போ் வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா்.
இவா்களுக்கு தனி வாா்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மழைக் காலங்களில் குழந்தைகள், முதியவா்கள், ஆஸ்துமா உள்ளவா்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, ஆறிய பின்னா் குடிக்க வேண்டும்.
2 அல்லது 3 நாள்களுக்கு தொடா் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றாா்.