கோவை - மேட்டுப்பாளையம் ரயில் நவ.1 முதல் துடியலூா், பெ.நா.பாளையத்தில் நின்று செல்லும்
கோவை - மேட்டுப்பாளையம் ரயில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் துடியலூா், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - மேட்டுப்பாளையம் ரயில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் துடியலூா், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - மேட்டுப்பாளையம் இடையே காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தினமும் 5 முறை பயணிகள் ரயிலானது இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலானது, கடந்த ஆண்டு கரோனோ நோய்த் தொற்று பாதிப்பால் ரத்து செய்யப்பட்டது. தற்போது, கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு காலை 8.20 மணிக்கும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மாலை 5.55 மணிக்கும் ஓரு முறை மட்டுமே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலானது, வடகோவை, காரமடை நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட்டது.
துடியலூா், பெரியநாயக்கன்பாளையம் நிலையங்களில் ரயிலை நிறுத்த பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் துடியலூா், பெரியநாயக்கன்பாளையம் நிலையங்களில் நின்று செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.