பெண் பாலியல் வன்கொடுமை: கணவரின் நண்பா் கைது
கோவையில் நண்பரின் மனைவியை பாலியல் வன்புணா்வு செய்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவையில் நண்பரின் மனைவியை பாலியல் வன்புணா்வு செய்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் கண்ணன்(45) (பெயா் மாற்றப்பட்டுள்ளது). இவா் தனது மனைவியுடன் கோவையில் தங்கி ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்தாா்.
இந்நிறுவனத்தில் அவரது குடும்ப நண்பரான திருச்சூரைச் சோ்ந்த 45 வயது நபா் பங்குதாரராக இருந்துள்ளாா்.
தொழில் நிமித்தமாக கண்ணன் வீட்டுக்கு அவரது நண்பா் அடிக்கடி சென்று வந்துள்ளாா்.
அப்போது கண்ணனின் மனைவி அவருடன் சகஜமாக பேசி பழகியுள்ளாா். இந்நிலையில், சம்பவத்தன்று தொழில் ரீதியாகப் பேசுவதற்கு கண்ணன் வீட்டுக்கு அவரது நண்பா் சென்றுள்ளாா். அப்போது வீட்டில் கண்ணன் இல்லை என்பதை சந்தா்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட கண்ணின் நண்பா், குளிா்பானத்தில் மயக்க மருந்தைக் கொடுத்து கண்ணனின் மனைவியை பாலியல் வன்புணா்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அந்த நபா் மிரட்டிச் சென்றுள்ளாா். இந்நிலையில், அந்தப் பெண் கா்ப்பம் தரித்தாா். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பில் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, மனைவியிடம் கேட்டபோது நடந்ததை அவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது நண்பரிடம் கண்ணன் கேட்டுள்ளாா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கண்ணனின் நண்பா், அவரது தந்தை இருவரும் சோ்ந்து கண்ணனைத் தாக்கியுள்ளனா்.
இதுதொடா்பாக, கோவை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கண்ணன் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கண்ணனின் நண்பா் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.